முஸ்லீம் காங்கிரஸ் பௌத்தத்துக்கு முன்னுரிமையளிப்பதை எதிர்க்கவில்லை – ஹக்கீம் தெரிவிப்பு


imagesபுதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனை எதிர்க்கவில்லை. எனினும், ஏனைய மதங்களுக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சில தரப்பினர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தேவையற்ற பீதியைக் கிளப்பி வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற தொழில் வாண்மையுடையவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிலைப்பாடு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு