பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்


164971711anuradapura-Lஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேற்று தீர்மானித்திருந்தனர்.

இந்தநிலையில், இன்றைய தினம் மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி பயணித்துள்ளனர்.

இன்று முற்பகல் குறித்த குழுவினர் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து அவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு