அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற சாத்தியம் உள்ளது – சிவாஜிலிங்கம்


sivajilingamஅநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு தவிர்ப்பு போராட்ட த்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருக்கும் நிலையில் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் உழைப்போம். அரசாங்கம் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற சாத்தியம் உள்ளது.

அவ்வாறு நிறைவேற்ற தவறினால் நாங்கள் போராடுவோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தமது வழக்குகள் வவுனியா நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டாம் எனக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் கடந்த 40 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

மேற்படி உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்து விட்டு யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போது சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

தமது வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண் டாம் எனக் கோரி தமிழ் அரசியல்கைதிகள் 3 பேர் கடந்த 40 நாட்களாக உணவு தவி ர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந் நிலையில் நேற்றுமுன்தினம் பல்கலைக் கழக மாணவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் போராட்டத்தை கைவிடு ங்கள் என அரசியல் கைதிகளிடம் கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நாங் களும், பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று அநுராதபுரம் சென்று உணவு தவி ர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்திருக் கின்றோம். இந்நிலையில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என கூறிக்கொண்டுதிரிய இயலாது.

ஜனாதிபதி செயலகம் தொட ர்ந்தும் எங்க ளோடு பேசி கொண் டிருக் கின்றது. இதனடிப் படையில் ஆளுநர் நேற்றும் என்னை தொடர்பு கொண்டு அரசாங்கம் இந்த பிரச்சினையை மிக விரைவாக தீர்ப்ப தற்கான நடவடிக் கைகளை எடுத்திருக்கின்றது.

எனவே மிக கூடிய விரைவில் இந்த பிரச்சினை தீர்க் கப்படும் என கூறியிருக்கின்றார். எனவே அர சாங்கம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான காலக்கெடு நிறைவடையவில்லை.

அரசாங்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாத் தியங்கள் உள்ளது. எனவே அதற்காக சற்று பொறுக்க வேண்டும். அதனையும் மீறி அரசாங்கம் ஒன்றையுமே செய்யவில்லை என்றால் அதற்கு அப்பால் எங்களுடைய போராட்டங்கள் நிச்சயமாக கனதியானதாக இருக்கும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு