மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப் பேரணி


palay-7வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று   காலை  அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இப்பேரணி வசாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றிலிலிருந்து ஆரம்பித்து அமைதிப் பேரணி வசாவிளான்இராணுவக் குடியிருப்பு நுழைவாயிலை சென்றடைந்தது.

இதன் போது இப்பேரணியில் கலந்து கொண்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  அங்கு வந்த யாழ் மாவட்ட இராணுவத்தளபதியுடன் கலந்துரையாடிய பின்னர் இராணுவ தளபதி  வழங்கிய வாக்குறுதியை அடுத்து போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக   ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு