ஆட்கடத்தல் குற்றசாட்டு ஹிருணிகா தவிர்த்து 8 பேரும் ஒப்புக் கொண்டனர்


240202hirunikaதெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தவிர்த்து ஏனைய எட்டு சந்தேகநபர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

2015ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி, ஹிருணிகாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, இன்று குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ஹிருணிகா தவிர்ந்த எட்டுப் பேரும், கடத்தல் சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு