மத்தள விமான நிலையம் மார்ச்சில் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது


Mattala_Airportமத்தள மகிந்த ராஜபக்ஷ விமான நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையும், இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து, கூட்டு முயற்சியாக, மத்தள விமான நிலையத்தை இயக்கவுள்ளன. இந்தக் கூட்டு முயற்சி வரும் மார்ச் மாதம் முதல் செயற்படுத்தப்படும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அதே சூழ்நிலையிலேயே மத்தள விமான நிலையமும் உள்ளது,

இதனை இலாபமீட்டும் துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மத்தள விமான நிலையத்தை சிறிலங்காவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இயக்கவுள்ள இந்திய நிறுவனத்தின் பெயரையோ, இது தொடர்பான உடன்பாட்டு விதிமுறைகள் பற்றியோ பிரதமர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு