தமிழகத்தைச் சேர்ந்த லண்டன் ஆலயப் பணியாளர் புத்தளம் விபத்தில் மரணம்!


Arumuga_Pandiகிழக்கு லண்டன் தமிழ் மக்களுக்கெல்லாம் அன்னம் இட்ட ஆறுமுகம் பாண்டி நேற்றைய விபத்தில் அகாலமரணமடைந்தார். அண்மையில் திருமணமான பாண்டி ஒரு குழந்தையின் தந்தையும் ஆவர். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை கிழக்கு லண்டன் தமிழர தமிழர்கள் தெரிவித்துக்கொள்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் புத்தளம் மதுரங்குளிப் பகுதியில் நேற்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த அறுவரில் ஆறுமுக பாண்டியும் ஒருவர்.

தமிழகத்தைச் சேர்ந்த பாண்டி திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள இலங்கை சென்றிருற்த போதே இந்த விபத்தில் சிக்கிக் கொண்டார்.

கிழக்கு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தில்  15 ஆண்டு காலம் வரை பிரதான சமையற்காரராகப் பணியாற்றி ஆலயத்திற்கு வருபவர்களையெல்லாம் தனது சுவையான உணவால் கவர்ந்த பாண்டி எல்லோரது மனங்களிலும் இடம்பிடித்து இருந்தவர்.

சில வாரங்களுக்கு முன் கற்பகவிநாயகர் ஆலயத்தின் தர்மகர்த்தா எம் கோபாலகிருஸ்ணன் இலஙங்கை சென்றிருந்த போது பாண்டியும் அவருடன் இருந்தார். பாண்டியின் மறைவு கற்பக விநாயகர் ஆலய அடியார்கள் மத்தியிலும் கிழக்கு லண்டன் தமிழ் மக்களின் மத்தியிலும் ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு