சீனர்களுக்கு 150 பேருக்கு இலங்கையில் திருமணம்


2008135017maithripala_sirisena1சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு 75 சீன திருமண இணையர்களுக்கும் திருமணச் சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.

திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்திரமுல்ல வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்து இடம்பெறும். மறுநாள், மூன்று குழுக்களாக சீண இணையர்கள் யால. சிகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இலங்கையின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு