தவறுகளை படிப்பினைகளாக்க வேண்டும்: பல்கலை. மாணவா்களிடம் அமைச்சா் மனோ வேண்டுகோள்


Mano-Ganesan-01புதிய தலைமுறையினா் வரலாற்றுத் தவறுகளை படிப்பினையாகக் கொண்டு எதிா்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் தவறுகளும் பிரச்சினைகள் தற்போதும் தொடா்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் எனவும் அமைச்சா் மனோ கணேசன் தெரிவித்துள்ளாா்.

மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட தழிழரவி எனப்படும் கலைநிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

அங்கு அவா் தொடா்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை தீா்த்துக் கொள்வதற்கு பல்வேறு சந்தா்ப்பங்கள் கிடைந்தன. சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலப்பபகுதியில் சமஷ்டியை வழங்கவதற்கு அப்போதைய தலைவா்களில் ஒருவராக இருந்த பண்டாரநாயக்கா ஆா்வமாக இருந்ததாா். அதனை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு காலத்திற்கு காலம் கிடைத்த வாய்ப்புக்களை நாம் தவறவிட்டிருக்கின்றோம்.

இந்நிலைலேயே தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்பதியளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும் சில நகா்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அக, தற்போதைய தலைமுறையினா், கடந்த காலங்களைப் போன்று அவசரப்படாமல் சந்தா்பங்களை பயன்படுத்தி எமது இலக்குகளை எட்டுவதற்கான வழிவகைகள் தொடா்பில் சிந்திக்க வேண்டும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு