கண்டி – வட கொழும்பு ஊடாக அம்பாந்தோட்டை வரை பொருளாதார வலயம்


438225964prime_minister_ranil_wickramasingheமேல் மாகாண பாரிய மாந­கர அபி­வி­ருத்தி திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட  பின்னர் புதிய உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் உரு­வாக்கும் தேவை ஏற்­ப­டாது. அதற்கு பதி­லாக தற்­போது உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை இணைத்து மாந­கர சபை­யாக மாற்ற முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் கண்டி மாந­கரம் முதல் வட கொழும்பு வரைக்கும் அங்­கி­ருந்து அம்­பாந்­தோட்டை வரைக்­கு­மான பிர­தே­சங்­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வல­ய­மாக மாற்­ற­வுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எட்­டா­வது நகர வலைத்­தள காங்­கிரஸ் மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இந்த காங்­கிரஸ் அமைப்பின்   30 வருட பூர்த்­தியை முன்­னிட்டு   எட்­டா­வது மாநாடு இலங்­கை யில் நடத்­தப்­ப­டு­கின்­றது.  இதன்­படி நேற்று நடை­பெற்ற மாநாட்டின் இரண்­டா­வது நாளில் பிர­தம அதி­தி­யாக கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்கண்­ ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

நகர அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுப்போம்.  இதன்­படி கண்டி மாந­கரம் முதல் வடக்கு கொழும்பு வரைக்கும் அங்­கி­ருந்து அம்­பாந்­தோட்டை வரைக்­கு­மான பிர­தே­சங்­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வல­ய­மாக மாற்­ற­வுள்ளோம். அத்­துடன் இதன் ஊடாக வீதி உட்­கட்­ட­மைப்­பு­களை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம்.

இதன்­பி­ர­காரம் தெற்கு அதி­வேக நெடுஞ்­சா­லை­யையும் மத்­திய அதி­வேக நெடுஞ்­சா­லையையும் ஒன்­றி­ணைத்து பொரு­ளா­தா ரத்தை   மேம்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். இதன் ஊடாக பாரிய பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­னெ­டுக்க முடியும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். மத்­தள விமான நிலை­யத்­தையும் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தையும் ஒன்­றி­ணைத்து சேவை­களை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்ளோம். மேலும் மாகம்­புற துறை­முகம் மற்றும் கொழும்பு துறை­மு­கத்தை ஒன்­றி­ணைக்­க­வுள்ளோம்.

மேல் மாகாண பாரிய மாந­கர அபி­வி­ருத்தி திட்டம் நடைமுறைப்படுத்திய பின்னர் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கும் தேவை ஏற்படாது. அதற்கு பதிலாக தற்போது உள்ள உள்ளூராட்சி மன்றங்களை இணைத்து மாநகர சபையாக மாற்ற முடியும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு