அஷ்ரப் மரணம் தொடர்பான அறிக்கை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிப்பு


ashraff2முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான எம்.எச்.எம் அஷ்ரப் விபத்தில் மரணமடைந்தமை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் பயணித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்தனர். இவர்களது மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இதனைக் கண்டறிவதற்காகவே அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிக்கை கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்திலிருந்து தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் அறிந்து கொள்ளும் சட்டதின் கீழ் கோரப்பட்டபோது அது காணாமல் போயுள்ளதாக அதன் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு