தமிழ்மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் தனிநாட்டினைக் கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்


medagoda-theroதமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவதிலும் பார்க்க அதிகளவான தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடு ஒன்றில் ஒரு பகுதியைத் தனிநாடாகக் கோருங்கள் என சிரேஷ;ட விரிரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்புகளை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில்; கலந்து கொண்டு கருதுக் கூறும்;போதே மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழர்களுக்கு என்னதான் பிரச்சினை இருக்கின்றது என்று நான் ஆழமாக யோசித்துப் பார்த்தேன். அவர்களுக்கென்று தனி ஒரு நாடு இல்லாமையே பிரச்சினை ஆகும். இந்தப் பிரச்சினையை அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சென்று அல்லது மலேசியா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஒருபகுpயைத் தனிநாடாகக் கோரலாம். இந்த உலகினில் இலங்கையை விடவும் அதிகளவான தமிழ்மக்கள் வாழ்கின்ற நாடுகள் உள்ளன. அங்கு சென்று சுயநிர்ணய உரிமையுடன் அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள் அப்படிப் பெறுவார்களாயின் எங்களால் முடியுமானவற்றை நாங்கள் சிந்தித்துக் கூறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு