வடமாகாண ஆளுநருக்கு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு


HG_Reginaldவடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் சன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர வடமாகாண ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவை மரியதாசன் சன் ஜேகூ தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் நேற்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி ஆளுநருக்கு இந்தக் கட்டளையை வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் செல்வதற்கான அனுமதி கேட்டு மாகாண ஆளுநருக்கு மரியதாசன் சன் ஜேகூ விண்ணப்பித்திருந்தார். ஆனால், அனுமதி கிடைக்க முன்னரே அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இந்த நிலையில், வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய மரியதாசன் சன் ஜேகூ மீள அழைக்கப்பட்டு, அனுமதி இன்றி வெளிநாடு சென்ற காரணத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் யாழ் மேல் நீதிமன்றத்துக்கு உள்ளது. இதனடிப்படையில் மரியதாசன் சன் ஜேகூ வெளிநாட்டில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டளையின் பிரதியை அவுஸ்திரேலியத் தூதரகத்துக்கும் அனுப்பி வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கட்டளை இட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு