எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! – அனந்தி சசிதரன்!


1695988122anandi-sasi-Lதொடர்ந்தும் வௌியாரின் உதவிகளை எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! என்று வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவித் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சங்கானை பிரதேச சபைக்கு உட்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வாழ்வாதார உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (11) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அனந்தி சசிதரன், அரச அலுவலர்களின் ஒத்துழைப்பு இன்மையாலேயே கடந்த காலங்களில் பின்தங்கிய இடங்களில் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்யமுடியாதிருந்தது.

மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிறைய வேலைத்திட்டங்களை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சரியான திட்டங்கள் இனம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் பகுதிகளில் என்னென்ன திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் அந்தந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கருதும் திட்டங்கள் குறித்து எமக்கு தெரியப்படுத்தினால் அத்திட்டம் குறித்து ஆராய்ந்து முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

பிரதேச செயலர்கள் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு வடக்கு மாகாணத்தை புறந்தள்ளி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்தநிலையில் மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வளித்தல் அமைச்சின் கீழ் திட்டங்களை செயற்படுத்த நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு