நீலப்பசுமை எனும் தொனிப்பொருளில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம்


1நாட்டின் பொருளாதாரத்தினை மீளவும் சரியான தடத்தில் முன்னெடுத்துச் செல்வதனை இலக்காகக் கொண்டு ‘நீலப் பசுமை’ எனும் தொனிப்பொருளில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியபோதே நிதி  அமைச்சர் மங்கள சமரவீர மேற்படி வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்தார்.

பாரளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளமையால் நேற்று காலை முதலே பரபரப்பான நிலையில் பாராளுமன்றம் காணப்பட்டது. குறிப்பாக விசேட அதிரப்படையினர், பொலிஸார் ஆகியோர் கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றிருந்தது.

நண்பகலுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை அதிகரித்திருந்ததோட அழைக்கப்பட்ட விசேட விருந்தினர்களும் வருகைதர ஆரம்பித்தனர். நேரம் நெருங்க நெருங்க உறுப்பினர்கள் அனைவரும் சபைக்குள் பிரவேசிக்க ஆரம்பித்தனர். ஆளும் கட்சி, உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற பேதமின்ற ஆங்காங்கே கூடிக்கூடி உரையாடியவாறு இருந்தனர்

இவ்வாறான நிலையில் சரியாக பிற்பகல் 3மணிக்கு சபை அமர்வு ஆரம்பமானது. அக்கிர ஆசனத்திற்கு வருகை தந்த சபாநாயகர் கருஜெயசூரிய சபாநாயகர் பாராளுமன்ற உறுப்புரிமை இழந்த கீதாகுமரசிங்வின் வெற்றிடம் இருப்பது குறித்த அறிவிப்பினை விடுத்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் தினேஷ் குணவர்த்தன எம்.பி ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார். இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் பரஸ்பரம் கூச்சல்களை எழுப்பியவாறிருந்த நிலையில் தினேஷ் குணவர்த்தனவின் ஒழுங்குப்பிரச்சனை எழுப்புவதற்குரிய இடமளிக்கப்பட்டால் அமைதியான நிலைமை நீடித்தது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர பிற்பகல் 3.07இற்கு சபைக்கு வருகை தந்தார். இவர் வருகை தரும்போது ஆளும் தரப்;பினர் மேசைகளில் தைட்டி வரவேற்றனர். புன்னகையுடன் சபைக்குள் பிரவேசித்த நிதி அமைச்சர் கூட்டு எதிர்க்கட்சியின் ஆரம்ப நிரலில் அமர்ந்திருந்த முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பியைப் பார்த்து கைகாட்டவும் அவரும் பதிலுக்கு புன்னகையுடன் மேசையில் தட்டி வரவேற்றார். தனது கையில் இருந்த கறுப்பு நிற கோப்பினை தூக்கிக் காட்டியவாறு  தனது ஆசனத்திற்குச் சென்று உரையை ஆரம்பித்தார். கடந்த வரலாற்றை நினைவுப்படுத்தி தனது உரையை ஆரம்பித்த மங்கள சமரவீர அதில் அதிக நேரம் செலுத்தாது நாட்டின் எதிர்காலம் தொடர்பிலேயே அதிகளவு கவனம் செலுத்தினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு