மக்களின் நலனில் அக்கறை இல்லை: அரசாங்கத்தை பாதுகாக்கின்றது கூட்டமைப்பு


imagesகடந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காரணத்தால் எம்மால் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவிக்க முடிந்தது. இதேபோன்று, தற்போதைய அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கிடைத்திருக்கும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,தங்களது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அதற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இவ்வாறான நிலையில் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வட- கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பை ஏற்று எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், இரு மாகாண சபை உறுப்பினர்களும் மாத்திரம் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத கட்சியைச் சேர்ந்தவர்.நான் ஜனாதிபதியுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறி வந்த நாடாளுமன்ற அங்கஜன் இராமநாதன் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.அரசாங்கக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட எமது மக்களின் நியாயமான போராட்டங்களுக்குப் பதில் சொல்ல முடியாத சூழலே நிலவுகிறது.

எமது மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டு வருகிறார்கள் என அவர் கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளா

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு