வரவு –செலவுத்திட்டம் சாதகமாகவுள்ளது!- கூட்டமைப்பு


Sumanthiranஎதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்­காக கூட்­ட­மைப்­பி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்கள் வரவு–செல­வுத்­திட்­டத்தில்   உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை சாத­க­மாக பார்ப்­ப­தாக ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். நாடா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது நல்­லி­ணக்­கத்­தினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடு­ப­ட­வேண்­டிய நிலை­மைகள் உள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் எமது தரப்பின் கருத்­துக்­க­ளையும் வரவு –செல­வுத்­திட்டத் தயா­ரிப்பின் போது கோரி­யி­ருந்­தார்கள். அச்­ச­ம­யத்தில் நாம் எமது மக்­களின் பிரச்­சி­னை­களை மையப்­ப­டுத்­தியும், நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தினை வலி­யுறுத்­தியும் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தோம்.

அந்த விட­யங்கள் இந்த வரவு –செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.  குறிப்­பாக முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மறு­வாழ்வு, வேலை­வாய்ப்பு, மாற்­று­த்தி­ற­னாளி பெண்­க­ளுக்­கான வீடுகள், விதவைப் பெண்­க­ளுக்­கான தேவைகள், இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­பினை கருத்­திற்­கொண்டு முத­லீ­டுகள் போன்ற விட­யங்கள் நிதி அமைச்­சரின் உரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

அதே­நேரம் காணாமல் ­போ­ன­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­தினை இயங்கச் செய்­வ­தற்­காக 1300 மில்­லியன் ரூபா ஒதுக்­க­பட்­டுள்­ளது. இவ்­வாறு தற்­போது நாம் அவ­தா­னித்த வகையில் எமது கருத்­துக்கள் கூடி­ய­ளவு உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

அத­ன­டிப்­ப­டையில் நாம் இந்த வரவு –செல­வுத்­திட்­டத்­தினை சாத­க­மா­கவே பார்க்­கின்றோம் என்றார்.  இதே­வேளை எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்பந்தன், வரவு –செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சாதகமாகவுள்ளன. எனினும் நாம் ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது. சொல்லப்பட்ட விடயங்கள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு