கல்லடி பிரதேசத்தை காத்தான்குடியுடன் இணைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


1079482520batti-protest-Lமட்டக்களப்பு காத்தான்குடி நகரசபையுடன் கல்லடி பிரதேசத்தை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தலைமையில் கல்லடி சிவானந்தா மைதானத்திற்கு முன்னால் இன்று (10) பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லடி தொடக்கம் மஞ்சம்தொடுவாய் வரையான பிரதேசத்தை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

வடக்கு – கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்பவர்களோடு தமிழர்கள் எவ்வாறு இணைவது, தமிழர்கள் பிரதேசங்களை பிரிக்காதே, தமிழர்களுக்கு புதிய நகரசபை வேண்டாம், தமிழர்களை மேலும் மேலும் வதைக்காதே, தமிழ் தலைமைகளின் ஆளுமை வேண்டும், தமிழர்கள் இனவாதியல்ல எங்களது அதிகாரங்களையே கேட்கின்றோம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோசமிட்டு அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

எமது கல்லடி பிரதேசத்தை இன்னும் ஒரு பிரதேசத்துடன் இணைப்பதற்கும் எல்லையை பிரிப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஆர்ப்பாட்டக்கார்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே கல்லடி பிரதேசத்திற்கு புதிய நகரசபை இணைத்து தரவேண்டும் என சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்கின்றோம் என ஆர்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சுலோகங்கள் ஏந்தியவாறு கோசமிட்டு மஞ்சத்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரி வரை சென்று அங்கிருந்து மீண்டும் சிவானந்தா மைதானத்தை வந்தடைந்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அகன்று சென்றனர்

இதேவேளை, அந்த பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு