ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்து வரும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு


downloadஇராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணி வெடிகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவரது பதவிக் காலத்தில் தெரிவித்திருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில், இந்த உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடாமல் இருப்பதற்கும் நல்லிணக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.ஒட்டாவா உடன்பாடு என்று அழைக்கப்படும், கண்ணி வெடிகளை தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் 160 நாடுகள் மற்றும் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

காலம் சென்ற பிரித்தானிய இளவரசி கம்போடியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் கண்ணி வெடிகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். பிரித்தானியா தயாரித்துக் கொண்டிருந்த தரை கண்ணி வெடிகளுக்கு எதிரான பயணத்தை தொடங்கியிருந்தார். இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை அமைச்சரவை கடந்த வருடம் மார்ச் மாதம் அனுமதியளித்திருந்தது. எனினும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்னமும் இதற்கு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.அப்போதைய பாதுகாப்பு செயலாளர் முதல் இப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன வரை ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அமைச்சரவை அனுமதி அளித்தும் பாதுகாப்பு அமைச்சு இன்னும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு