தாயின் சடலத்துடன் இரண்டு நாட்கள் வசித்த குழந்தை


ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று, தனது தாயின் சடலத்துடன் இரண்டு நாட்கள் வசித்து வந்தச் சம்பவம், அம்பலாங்கொடை, மாதம்பாகம இடம்தொட்ட என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பிரதேசத்தில்,  வாடகை வீட்டில் வசித்து வந்த ஒரு குழந்தையின் தாயொருவர் (வயது 22), கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இவரது கணவர் மீன்பிடி தொழிலுக்காக, ஆழ்கடலுக்குச் சென்றுவிட்டதால், மேற்படி பெண் தனது, ஒன்றறை வயது குழந்தையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8,9 ஆகிய இரு தினங்களும்,  மேற்படி பெண்ணிடமிருந்து எவ்விதத் தொடர்பும் கிடைக்கவில்லை என்பதால், அவரது உறவினர்கள் நேரடியாக வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் வசித்துவந்த வீட்டின் அறை பூட்டியிருந்தாகவும் கதவை உடைத்துக்கொண்டு சென்று பார்த்தபோது, பெண், கட்டிலில் சடலமாகக் கிடந்ததாகவும் அவருக்கு அருகில் பெண் குழந்தை இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு