போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்தும் – ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன்


stgeepanஇலங்கை இராணுவத்துக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்தும் என ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் மீது இராணுவத்தினர் சித்திரவதைகளை மேற்கொண்டனர் என ஐரோப்பாவில் உள்ள பாதிக்கப்பட்ட சிலர் சர்வதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸிடம் தெரிவித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.நா. அமைதி காப்புப் பிரிவுக்கு உறுதுணையாக இருக்கும் எந்த வொரு துருப்புக்களும் எந்த மனித உரிமை மீறல்க ளையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா வின் அமைதிகாப்பு நடவடிக்கைகள் திணைக்களம் மற்றும் புலம்பெயர் ஆதரவுத் திணைக்களம் ஆகிய இந்தக் குற்றச்சாட்டுக்களை ஆராயும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு