2025ல் அனைவருக்கும் வீடு வழங்குவதாக சஜித் தெரிவிப்பு


112455594sajith-premadasa-இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்கும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டதின் ஊடாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட 66 விதத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வீடமைப்புத் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி அதன் முழுமையான பிரதிபலனை நாட்டு ஏழை மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு