புதிய தலைமுறையினர் வரலாற்றுத் தவறுகளை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் -மனோ


Mano-Ganesan-புதிய தலைமுறையினர் வரலாற்றுத் தவறுகளை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில் தமிழ்த் தலைமைகளின் தவறுளே பிரச்சினைகள் தற்போதும் தொடாந்து கொண்டிருப்பதற்கு காரணம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடத்தப்பட்ட தழிழருவி எனப்படும் கலைநிகழ்வில் நேற்று முன்தினம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைந்தன. சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலப்பபகுதியில் சமஷ்டியை வழங்கவதற்கு அப்போதைய தலைவர்களில் ஒருவராக இருந்த பண்டாரநாயக்கா ஆர்வமாக இருந்தார். அதனை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு காலத்திற்கு காலம் கிடைத்த வாய்ப்புக்களை நாம் தவறவிட்டிருக்கின்றோம்.

இந்நிலைலேயே தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்பதியளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும் சில நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆக, தற்போதைய தலைமுறையினர், கடந்த காலங்களைப் போன்று அவசரப்படாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எமது இலக்குகளை எட்டுவதற்கான வழிவகைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமைக்கு கடந்த கால தமிழ்த் தலைமைகள் விட்ட தவறே காரணம் என்று ஈ.பி.டி.பின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி குற்றம்சாட்டிவருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் மனோவும், டக்ளஸ் பாணியில் தமிழ்த் தலைமைகள் மீது குறைகூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு