லைமைப் பதவி வேண்டும்: கூட்டு எதிர்க்கட்சி விடாப்பிடி


mahindaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி இணைவதற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும், செயலாளர் பதவியையும் வழங்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியில் 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையிலேயே இவர்களில் இருவருக்கு குறித்த பதவிகளை வழங்க வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் நோக்கில் கூட்டு எதிரணியினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமது முதலாவது அரசியல் கூட்டத்தினை மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு