மதுபானசாலைகளை அகற்றக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம்


203685257batticalo-protest-Lமட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்ககோரியும் ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

யுத்ததிற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஆரையம்பதி பகுதியில் இரண்டு மதுபானசாலைகள் சட்ட விரோதமான முறையில் இயங்கி வருவதாகவும் அதற்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகையில் அதனையும் மீறி சில அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்த மதுபானசாலைகள் இயங்கிவருவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டுகுறித்த மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாது என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், அதனை மீறி அனுமதி வழங்கப்பட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மதுபாவனைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதுடன் வறுமை நிலையும் அதிகரித்துள்ளதுடன் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு