இராணுவம் வடக்குத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியமை உண்மையே முதலமைச்சர் தெரிவிப்பு


CM-WIGNESWARAN-1வடக்கில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் உரிமை மீறல்களை மேற்கொண்டது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன எனக் கடந்த புதன்கிழமை அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், குறித்த சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் நான் முன்னர்; கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும், துரதிஷ;டவசமாக அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. அத்தகைய அனைத்துலகப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், இத்தகைய இராணுவக் கொடுஞ்செயல்கள் இடம்பெறுவதற்குத் தடையாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு