ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டம் ?


sagalaஇலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வரும் அதேவேளை, சிறப்பு நடைமுறையொன்றையும் அமுல்படுத்தவுள்ளதாக, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று (14) நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்தத் தெரிவிக்கையில்,

“இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன், சிறப்பு நடைமுறையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும். எனவே, இதன் ஓர் அங்கமாக, ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக, விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு