சவுதிக்கு பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்படும் இலங்கைச் சிறுமிகள்


567048978saudi-princess-Amira-Bint-Aidan-Bin-Nayefஇலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சோமாலியா போன்ற நாடுகளிலுள்ள அநாதரவான சிறுமிகள் சவுதி அரேபியாவுக்கு பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்படுவதாக, தகவல் வௌியாகியுள்ளது.

அந்த நாட்டு இளவரசியான அமீர் பின்ட் அய்டன்பின் நயிஸ், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், சவுதியில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக கைதுசெய்யப்பட்ட அல் வலிட் பின் தலால் என்ற இளவரசரின் மனைவியே இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்தா நகரில் போதைப் பொருளுக்கு அடிமையாகிய சிறுமிகள் பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளதாக இளவரசி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமிகளை விலை கொடுத்து வாங்குபவர்களின் அனுமதியின்றி அவர்கள் வௌியில் செல்லக் கூட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்து
  1. BC on November 15, 2017 4:43 pm

    இளவரசியான அமீர் பின்ட் அய்டன்பின் நயிஸ்யான அமீர் பின்ட் அய்டன்பின் நயிஸ் அவர்களுக்கு கொடுமைகளை வெளியே கொண்டு வந்ததிற்கு நன்றி.
    இளவரசியான அவர் மத கட்டளைபடி பர்தா போடாதபடியால் இலங்கை அநாதரவான சிறுமிக கொடுமைக்கு உள்ளாவதை காணக் கூடியதாக இருந்தது.
    பர்தா போட்டு கொண்டு என்ன என்ன கொடுமைகள் செய்கிறார்களோ சவூதி அரேபியாவில்?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு