இந்திய மீனவர்கள் 10 பேர் கைது.


Daily_News_2711406946183இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் நாகப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த 10 தமிழக மீனவர் யாழ் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்களின் இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

கைது செய்யப்பட்ட 10 இந்திய தமிழக மீனவர்களை கடற்படையினர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஒப்படைக்கப்பட்ட 10 மீனவர்களையும் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் நீரியல்வளத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் கருத்து
  1. BC on November 17, 2017 4:04 pm

    இந்திய தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை இந்தியாவில் கவலைக்கு இடமானது.
    தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது இந்திய கடற்படை. இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது இந்திய செய்திகள்.ஆனால் வைகோவோ சீமானோ கூச்சல் போடவில்லை மௌனம் கடைபிடித்தனர் பெற்று கொள்ளும் பணத்திற்க்கு எங்கே கூச்சல் போட போட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

    தொண்டைமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தமிழ்நாட்டு திமுகதலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினாரம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு அதற்கு அவா இலங்கை அரசிடம் பேசுவோம் என்றாவாம். திமுகதலைவர் ஸ்டாலின் யாழ்பாணத்து ஊர் ஒன்றின் பெயரை கருணாநிதி நகர் என்று மாற்ற வேண்டும் என்றும் கேட்பார்.
    சொந்த நாட்டில் தங்களது மக்களை ஏமாற்றுவதற்காக இலங்கையை பாவித்து அரசியல் செய்யும் மோசடிகாரர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.இடதுசாரி வினவு உட்பட.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு