மாகாண முதல்வரை சிறைப்பிடித்த வேலையில்லாப் பட்டதாரிகள்


1400566167_7828705_hirunews_central-provincial--councilவேலையில்லாப் பட்டதாரிகள் மத்திய மாகாண முதல்வரை சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவொன்று தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரக் கோரி மத்திய மாகாணசபை வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்க மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபையினுள் இருந்தனர்.

திடீரென பட்டதாரிகள் மாகாண சபையின் அனைத்து வாயிற்கதவுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு, கதவுகளைத் திறக்க முடியாதபடி முடக்கினர். இதனால், மாகாண முதல்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வெளியேற வழியின்றித் தடுமாறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

எனினும், அவர்களது பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருவதாக மாகாண முதல்வர் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு