ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தென்கொரியாவில் கௌரவ குடியுரிமை


667545910maithripala_Lதென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த நாட்டின் சோல் மெட்ரோபொலிடன் நகரத்தில் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

சோல் மெட்ரோபொலிடன் நகரத்தின் நகராதிபதி பாக் வொன்சுனின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற விஷேட நிகழ்வில் ஜனாதிபதிக்கு இந்த கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக்கு போன்றே சர்வதேச உறவுகளை பலப்படுத்திக் கொள்வது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கும் விடா முயற்சி தன்னை ஈர்த்துள்ளதாக சோல் மெட்ரோபொலிடன் நகரத்தின் நகராதிபதி பாக் வொன்சுன் கூறியுள்ளார்.

இதனை மதிக்கும் நோக்கத்திலும் நெருங்கிய நட்புறவின் சின்னமாகவும் இந்த கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டதாக பாக் வொன்சுன் கூறியுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு