எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப் பெறப்பட்டது – உள்ளூராட்சி தேர்தல் தடை நீக்கம்


timthumbஎல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

முன்னதாக எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர்களால் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, கடந்த 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி வரை தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறத்தது.

அதன்படி இன்று இந்த வழக்கு மீளப் பெறப்பட்டதையடுத்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு