மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு அரசே அனுமதி வழங்கியது


CM-1மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

‘இல்லையென்றால் ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தைப் போன்று இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு தடையுத்தரவை இந்த ஆட்சியும் பிறப்பித்திருக்க வேண்டும்.எனவே அவ்வாறு தடையுத்தரவு போடாமல் அதனை அனுஷ்டிக்க சென்றவர்களை கைதுசெய்யப் போவதாகவும்’ வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு