சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்


image_dc4287ceb1சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில், மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்றது.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூவின சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

“வன்முறைகளற்ற வீடு, சமூகம், நாடு எமக்கு வேண்டும்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை, நீதி, சமாதனம் எமக்கு வேண்டும்”, “இனங்கள் இணைந்து இன்பமாய் வாழும் சமூகம் எமக்கு வேண்டும்” என்ற கோரிக்கைகளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முன்வைத்தனர்.

அதேபோன்று, “காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை கண்டறியப்பட்டு  நீதி வழங்கப்படவேண்டும் எனக்கோரி போராடிவரும் சகோதர உறவுகளுடன் நாம் இணைகின்றோம்” என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  வலியுறுத்தினர்.

மேலும், நாடளாவிய ரீதியில் சமகாலத்தில் இனங்களுக்கிடையே ஏற்பட்டுவரும் வன்முறைகளைக் கண்டிப்பதாகவும் வன்முறைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்படவேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு