இரணைமடு குடிநீர் விநியோகம் தொடர்பில் மாற்றுவழி


Rauff-Hakeem-e1450285454534பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் போது   பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பல வருடங்களாக யாழ் மக்கள் குடிநீர் பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கான நீர் விநியோக முயற்சி தடைப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு திட்டங்களினூடாக இந்த மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுமா என வினவினார்.

அதற்குப்  பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது. இரணைமடு நீர் தேக்கத்தின் கொள்வனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் ரீதியான பிரச்சிகைள் உண்டு. இதனால் மாற்று வழி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு