இந்திய – இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை


இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.

கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதமாக அவர் கூறியுள்ளார்.

201608250754130312_India-to-provide-Rs-300-million-aid-to-Sri-Lanka-for_SECVPF-1ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா போர் கப்பலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிழக்கு பிராந்திய கடற்படை செய்து வருகிறது.

இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் சிக்கி கொண்டால் அவர்களை மீட்பதற்கு கடற்படை எப்போதும் தயாராக உள்ளது. வருங்காலங்களில் மீனவர்கள் எல்லை பகுதியில் சுமுகமாக மீன் பிடிப்பதற்கும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அடுத்த மாதம் இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

சென்னையில் கடற்படை தளம் அமைப்பதற்காக தமிழக அரசிடம் இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கடலில் தத்தளித்த 14 மீனவர்கள் எங்களது வீரர்களால் மீட்கப்பட்டு உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு