சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பு மனுவில் தொண்டா – பிரபா அணி கைச்சாத்து


288268858thondaman-praba-LLஎதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வேட்புமனுவில் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானால் இன்று (03) கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் கையெழுத்திடப்பட்டது.

அத்துடன், கொழும்பு, கொலன்னாவ, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரபா கனேசன், மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு