மொரகஹகந்த நீர்மின் உற்பத்திக்கான நீர் ஜனாதிபதியால் திறந்து வைப்பு


625.0.560.320.160.600.053.800.700.160.90மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை நீர்மின்னுற்பத்திக்காக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அங்கு பரிசோதனை நடவடிக்கையாக நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று (02) மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

தற்போது நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மொரகஹகந்த நீர்பாசன திட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அவசியமான நீரின் அளவு கடல் மட்டத்திலிருந்து 178 மீற்றர் நேற்றைய தினம் நிரம்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

. இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது ரஜரட்ட மக்களுக்காக தாம் நீண்ட நாட்களாக கண்ட கனவு திட்டம் என குறிப்பிட்டார்.

. அந்த கனவை நனவாக்கும் மற்றுமொரு விசேட தினம் இன்று உதயமாகும் வரை தாம் காத்திருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீரை விவசாய மக்களுக்கு அவசியமான வகையில் வழங்கிய பின்னர் அதனை தேசிய நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தி 25 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

. இன்று தொடக்கம் எதிர்வரும் 4 நாட்களுக்கு நடத்தப்படும் பரிசோதனையின் பின்னர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்து பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

. இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சிக்காக நியமிக்கப்பட்ட புதிய 20 அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

. இதன்படி, நுவரெலியா, கண்டி, கம்பஹா, கொழும்பு. காலி, அனுராதபுரம், ரத்தினபுரி, திகாமடுல்ல, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு