கோயில்களின் முன் தேர்தல் கூட்டம் நடாத்தத் தடை


Mahinda_Deshapriya_Lஎந்தவொரு தேர்தல் பரப்புரைக்கும் மத வழிபாட்டு இடங்களைப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணைக்குழு தடை செய்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

‘இதுதொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும், மத வழிபாட்டு இடங்களில், நேரடியான அல்லது மறைமுகமான தேர்தல் பரப்புரைகளையும் மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் பரப்புரைக்கான கலந்துரையாடல்களையும் கூட இங்கு நடத்தக் கூடாது.

உள்ளூராட்சித் தேர்தலின் போது, இதுபோன்ற தேர்தல் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ‘ என்றும் அவர் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு