சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார்


IMG_4676நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும்  அதற்கான அனைத்து பணிகளும் நிறைவுற்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  தலைவருமான  மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம்(02) கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
எங்களுடைய அமைப்பு  வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கவுள்ளது. கிளிநொச்சியில் கரைச்சி, பளை, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம். அதற்கான அனைத்து பணிகளையும் பூர்த்தி  செய்துள்ளோம்.  மக்களின் விருப்பத்திற்கு அமைவாக அவர்களின் முன்மொழிவுகளுக்கு ஊடாக ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு மிக்க நல்ல வேட்பாளர்களை மக்கள் எமது அமைப்புக்கு வழங்கியுள்ளனர். எனத்தெரிவித்த அவர்
ஒரு  உள்ளுராட்சி சபை மக்களுக்கு என்ன  செய்ய வேண்டுமோ, அவற்றின் பணிகளும் கடமைகளும் என்னவோ அது கடந்த காலத்தில் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த காலத்தில் கிளிநொச்சி  மாவட்டத்தில் நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளுக்கு ஊடாக பல மாற்றங்களை ஏற்பத்தினோம், மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு  வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.   அதனை இந்த மாவட்டம்  இன்றும் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறது. எனவேதான்  எங்களுடைய சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உறுதியாக மக்களிடம் கூறுகின்றது நாங்கள் பிரதேச சபையின் அதிகாரத்திற்கு வருகின்ற போது பிரதேச சபைகளை வினைத்திறன் உள்ள ஒரு சபையாக மாற்றுவோம், செயற்பாடே எங்களுடை பலம் அதுவே மக்களுக்கும் தேவை எனவும் குறிப்பிட்ட அவர்
 இந்த உள்ளுராட்சி தேர்தலில் எமது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஊடாக சுயேட்சையாக போட்டியிடுகின்ற எங்களுடை வேட்பாளர்கள்  மக்கள் மத்தியில் நன்மதிப்பு மிக்க  ஆளுமையுள்ளவர்கள் இவர்களை அந்தந்த பிரதேச மக்கள்  தங்களின் பிரதிநிதியாக வேட்பாளராக தெரிவு செய்துள்ளனர்  இது எமது அமைப்புக்கு மேலும் பலத்தைச் சேர்த்துள்ளது. வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் எங்களுடை அமைப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்  அதற்காக ஆதரவை மக்கள் வழங்கி  வருகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
 ஆனந்தபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மனோகரன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சி நகர  வட்டார வேட்பாளர் மோகன்ராஜ்,  ஆனந்தபுரம்  மேற்கு ரஜனிகாந்த, செயலாளர் சந்திரசேகர மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி, பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு