சுவிஸ் குமாருக்கு உதவி புரிந்த உதவி பொலிஸ் ஆய்வாளருக்கு பிடியாணை


srikajanமாணவி வித்யா படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிக்க உதவி புரிந்தமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

யாழ் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

வழக்கில் கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார்

இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வு அதிகாரி நிசாந்த இன்று மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்தார்.

இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்றவேளை யாழ் பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாகவுள்ள சிறிகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதவான் இதன்போது பிறப்பித்திருக்கின்றார்..

அவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளத்துக்குட்படுத்தி அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு