முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் பிரேரணை நிறைவேற்றம்


1774154653north-pc-lமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 111வது அமர்வு இன்று (05.12) கைதடியில் அமைந்துள்ள பேரவையில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

அதன்போது, வடக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமென்ற பிரேரணையினை ரி. லிங்கநாதன் முன்மொழிந்தார். அதன் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், தற்போது, 6000 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2018 ஆம் ஆண்டில் இருந்து அந்த சம்பளம் முழுமையாக கிடைக்கும். இருந்தும், சம்பளத்தை அதிகரிக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அரசாங்கத்திடம் அவ்வளவு நிதி இருக்குமா என்பது சந்தேகம். இருந்தாலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பரிசீலணை செய்வோம் ஏன்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு