அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களின் தீர்வாகாது – கோட்டாபய


koththaஅதிகாரப் பகிர்வின் மூலம், தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என காலியில் நேற்று இடம்பெற்ற எலிய அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வேறு இராச்சியமொன்றை உருவாக்கவே அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசுகின்றனர். தங்களுடன் சேர்த்து நூற்றுக்கு 68 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஏனைய பிரதேசங்களில் வசிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், அந்த பிரதேசத்துக்கு மட்டும் அதிகாரத்தைப் பகிர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வைக் காண்பது என கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, அவர்களது இரகசிய எண்ணம் என்னவென்பது இதனூடாக தெளிவாகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் எலிய அமைப்பை இனவாத அமைப்பாக காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், இந்த அமைப்பு இனவாதமானதல்ல.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அனைத்து இன மக்களும் கௌரவமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கவே தமது போராட்டம் இடம்பெறுவதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாட்டைப் பிரிப்பதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் என்றும் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு