உதயசூரியன் சின்னத்தின் கீழான சந்திப்பு – ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் சுரேஷ்


sooriyan-1தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி பிரிந்து சென்ற  ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளும் மற்றும் புதிய ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னாள் போராளிகளின் ஒரு பகுதியினர், ஆகியன தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்தில் சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய தமிழரசுக்கட்சியுடனான குழப்பத்தின் பின்னர் ரெலோ கட்சி வெளியேறியிருந்தது. இருப்பினும் பிந்திய தகவல்களின்படி ரெலோ அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரியவந்திருக்கிறது.

ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரிலான கட்சியில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் சிவகரன் உட்டவர்கள் பங்கேற்றிருப்பதாக தெரியவருகிறது.

ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், பங்கேற்றிருக்கின்றனர். சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பிற்பகலே ரெலோ தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு