தனித்து போட்டியிடப்போவதில்லை; கூடி முடிவெடுப்போம் என்கிறார் சித்தார்த்தன்


Tharmalingam-Sitharthan-yaalaruviதமிழரசுக்கட்சியுடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மத்திய குழுவைக் கூட்டி ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்கும் என, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் புளொட் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன், தங்கள் முடிவும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு