தமிழரசுக்கட்சி ஆயுதக்குழுவல்ல; ஆயுதக்குழுக்களை அரவணைக்கும் கட்சி – சுமந்திரன்


Sumanthiranதமிழரசுக்கட்சி ஆயுதம் ஏந்தாதவர்களைக் கொண்டது. ஆனாலும் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்களை அது அனுசரித்துவைத்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.

குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஆசனப்பங்கு கேட்டு பிரிந்து செல்லும் நிலைமைக்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை தவிர பங்காளிகளாக உள்ளவர்கள் ஆயுத குழுக்களாக இருந்து வந்தவர்கள்.

அதற்காக நாங்கள் பங்காளி கட்சிகளான ஆயுதக்குழுக்களை புறக்கணிக்க மாட்டோம். அவர்களுடன் சேர்ந்து பயணிக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இவற்றையும் தாண்டி கூட்டமைப்பில் இருந்து வெளியேறவேண்டும் என எண்ணுபவர்களை தாம் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு