மன்னாரிலும் தமிழரசுக்கட்சி – ரெலோ இழுபறி! ஆயர் இல்லத்தின் உதவி கோரப்பட்டதாக தகவல்


samகூட்டமைப்பிற்குள் தொடரும் பிணக்குகளின் தொடராக மன்னார் நகரசபை விவகாரம் ஆயர் இல்லத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

சமரச பேச்சுக்களின் பிரகாரம் இரண்டு ஆண்டுகள் ரெலோவும் இரண்டு ஆண்டுகள் தமிழரசுக்கட்சியும் நகரசபையினை ஆட்சி செய்வது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் தமிழரசுக்கட்சியின் கடும்போக்கினால் ரெலோ ஆயர் இல்லத்தின் உதவியினை நாடியிருப்பதாக தெரியவருகிறது.

இரண்டு கட்சிகளின் உயர்பீடங்களும் பேசி முடிவுகள் எட்டப்படமுடியாத நிலையிலேயே மன்னார் ஆயர் இல்லத்தின் உதவியினை நாடியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இது குறித்து இரண்டு தரப்புக்களையும் ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஆயர் இல்லத்தினர் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து
  1. BC on December 16, 2017 4:11 pm

    ரெலோ ஆயர் இல்லத்தின் உதவியினை நாடியிருப்பதால் இயேசு ரெலோவுக்கு உதவி செய்வார்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு