இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுகிறது – அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு


WFQWFQFQWFஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் காலாவதியாகின்றது. அடுத்த ஆண்டுக்கான ஜி.எஸ்.பியின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.

இதன் விளைவாக ஜி.எஸ்.பி இவ்வாண்டுடன் காலாவதியாவதனால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 1, 2018 முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு