வட கொழும்பில் மையம் கொண்டுள்ள அரசியல் நபர்களிடமிருந்தே அச்சறுத்தல் – மனோ கணேசன்


Mano-Ganesan-Lவட கொழும்பில் மையம் கொண்டுள்ள ஒருசில அரசியல் நபர்களிடமிருந்தே எனக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெவ்வேறு கலந்துரையாடல்களில், நான் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு தெரிவித்துள்ளேன்.

நான் கொழும்பு மாவட்ட பாராளுமன்று உறுப்பினர். ஆனால், முழு நாட்டையும் உள்ளடக்கிய, இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவரையும் தழுவிய தேசிய அரசியலையே நான் மேற்கொள்கிறேன்.

எனினும் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் வழமையாக பழி சொல்லப்படுவது போல் வடக்கு கிழக்கில் இருந்து வரவில்லை.

மலைநாட்டிலும் எனக்கு அச்சறுத்தல் இல்லை. கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இருந்தும் எனக்கு அச்சறுத்தல் இல்லை என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு