அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியினர் இணைந்தாலும் மக்கள் இணையமாட்டார்கள்


mahindablamarjunafamilyஅரசாங்கத்துடன் எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் இணைந்து கொண்ட போதிலும் மக்கள் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

குணசிங்குபுர புர்வாராம விகாரையில் நேற்று இரவு இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்பொழுது பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளதாகவும், இதனூடாக மக்களுக்கு மிகவும் இக்கட்டான நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு